• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார்..!

admin by admin
July 30, 2025
in இலங்கை செய்திகள்.
0
லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார்..!
Share on FacebookShare on Twitter

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) உயர்நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ்.டி.சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள பாதுகாப்பு காரணங்களுக்காக தமது சேவைப் பெறுநர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்குப் பதிலாக கொழும்பு நீதிமன்றம் ஒன்றில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இதன்போது. மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், இந்தக் கோரிக்கையை இன்றில் இருந்து ஒரு வாரத்துக்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பொருத்தமான உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ்.டி.சில்வாவுக்கு அறிவித்தது.

மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகேவும் அந்தக் கோரிக்கைக்கு தமது இணக்கத்தைத் தெரிவித்தார்.

அதன்படி, மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை முடிவுறுத்துவதற்கு நீதியரசர்கள் ஆயம் முடிவு செய்தது.

2011 டிசம்பர் 9 ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யயப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 2019 ஆம் ஆண்டு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது எனக் கூறி, குறித்த அறிவித்தல் அனுப்பும் முடிவுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலை இரத்துச் செய்தது.

இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி, காணாமல்போனவர்களின் உறவினர்கள், உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்தனர்.

Related Posts

தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

by selvan
June 28, 2026
0

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக,...

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

by selvan
June 28, 2026
0

பொசன் பண்டிகை காலப்பகுதியில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு நேரடியாக சட்ட நடவடிக்கை!

by selvan
June 28, 2026
0

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு...

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

by selvan
June 28, 2026
0

2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின்...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி