1814
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1874
சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.
1889
பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலைநேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
1900
சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.
1933
ஜேர்மனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
1938
அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91 மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.
1948
இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.
1958
ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலைவரானார்.
1965
மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
1966
குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
1967
நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1969
ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.
1976
கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.
1995
எம்பி3 பெயரிடப்பட்டது.
2002
பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2015
நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.
2016
பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.















