1844
இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
1869
இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
1989
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1830
வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இஸ்க்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டஃப், இராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.
1863
நியூயார்க் நகரத்தில் அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.
1878
பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1919
பிரித்தானியாவின் வான்கப்பல் ஆர்34 அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது.
1923
லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் “ஹாலிவுட் குறியீடு” அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது “ஹாலிவுட்லாந்து” என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930
முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
1931
காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1971
மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
1977
சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது.
1977
மின்சார இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1997
சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001
சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
2005
பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2011
மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தனர்.
2011
தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
2016
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார். தெரசா மே புதிய பிரதமரானார்.














