1991
யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
1806
வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.
1869
சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.
1882
பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது.
1890
வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44ஆவது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.
1909
ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1913
கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.
1921
வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.
1925
சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1925
இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44 ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.
1938
ஓவார்டு இயூசு 91 மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.
1941
இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1942
நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
1943
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு சிசிலியில் ஆரம்பமானது.
1947
முகம்மது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.
1951
கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் கேசாங் நகரில் ஆரம்பமாயின.
1962
உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.
1966
மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிகாகோ விடுதலை இயக்கம் 60,000 பேர் கலந்து கொண்ட பெரும் பேரணியை நடத்தியது.
1973
வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1973
பகாமாசு பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.
1976
அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.
1978
மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து ஜனாதிபதி மொக்தார் டாடா பதவியிழந்தார்.
1985
கிரீன்பீஸ் கப்பல் ரெயின்போ வாரியர் ஓக்லாந்து துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.
1985
சோவியத் உசுபெக்கித்தானில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.
1991
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முடிவுக்கு வந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
1991
போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1992
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.
1997
நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் “நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு” ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.
2006
இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.
2011
ரஷ்யப் பயணிகள் கப்பல் பல்கேரியா வோல்கா ஆறு தத்தாரித்தானில் வோல்கா ஆற்றில் மூழ்கியதில் 122 பேர் உயிரிழந்தனர்.
2017
ஈராக்கின் மோசுல் நகரம் இஸ்லாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது.















