1837
பிரித்தானிய இலங்கை, சட்டவாக்கப் பேரவையில் முதல் தடவையாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
1903
யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு உருவானது.
1956
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.
1995
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1995
யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1807
பிரான்சின் முதலாம் நெப்போலியனும் ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டரும் தில்சித் நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1810
ஒல்லாந்து இராச்சியத்தை நெப்போலியன் தனது முதலாம் பிரஞ்சு பேரரசுடன் இணைத்துக் கொண்டான்.
1816
அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1821
கிரேக்க விடுதலைப் போரில் உதவியமைக்காக பேராயர் கிப்பிரியானொசு உட்பட 470 முக்கிய சைப்பிரசினர் தூக்கிலிடப்பட்டனர்.
1850
பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார்.
1868
அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1875
உதுமானியரின் ஆட்சிக்கு எதிரான எர்சகோவினா கிளர்ச்சி ஆரம்பமானது. இது மூன்று ஆன்டுகள் நீடித்தது.
1877
முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின.
1900
அவுஸ்திரேலியக் கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆத்திரேலியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.
1900
வெளிநாட்டு கிறித்தவ மதப்பரப்புனர்கள் 45 பேரைத் தூக்கிலிட வடக்கு சீனாவின் சான்சி மாகாண ஆளுநர் உத்தரவிட்டார்.
1918
அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் உயிரிழந்தனர், 171 பேர் படுகாயமடைந்தனர்.
1943
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
1948
பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
1955
ரசல் – ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை அணுவாயுதங்களினால் ஏற்படும் அழிவுகளைக் குறைக்கக் கோரியது.
1956
கிரேக்கத்தில் சைக்கிளேடு தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கமும், ஏஜியன் கடலில் ஆழிப்பேரலையும் ஏற்பட்டதில் 53 பேர் உயிரிழந்தனர்.
1982
அமெரிக்காவின் பான் ஆம் விமானம் லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 145 பேரும் தரையில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
1986
நியூசிலாந்தில் ஒருபாலுறவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1991
30 ஆண்டுகளின் பின்னர் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
2002
ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
2006
சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
2006
2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
2006
அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.
2011
தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.














