1956
சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
1962
இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
1885
பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
1892
தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1917
முதலாம் உலகப் போர்: அரபுக் கிளர்ச்சியின் போது அராபியப் படைகள் லாரன்சு தலைமையில் அக்காபாவை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றினர்.
1935
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
1939
நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
1941
ஜேர்மானிய இராணுவம் சிமோலியென்சுக்கின் அருகில் சோவியத் இராணுவத்தினரை சிற்றி வளைத்தன.
1944
அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர், 700 பேர் வரை காயமடைந்தனர்..
1947
சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.
1964
மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1966
மலாவி குடியரசாகியது. ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா அதன் முதல் அரசுத்தலைவரானார்.
1967
நைஜீரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1975
கொமொரோசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1988
வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1989
டெல் அவீவ் – எருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இஸ்லாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
2006
44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
2013
நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
2013
போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.
2013
கனடாவின் கியூபெக்கில் எண்ணெய்த் தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர், நகரின் மத்திய பகுதியில் 30 கட்டடங்கள் சேதமடைந்தன.














