1822
அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர்.
1823
பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1839
கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர்.
1853
ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
1871
இத்தாலியப் பேரரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் திருத்தந்தை நாடுகளிடம் இருந்து தான் கைப்பற்றிய ரோம் நகரை அடைந்தார்.
1881
அமெரிக்க ஜனாதிபதி சேம்சு கார்ஃபீல்டு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.
1897
பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை லண்டனில் பெற்றார்.
1921
முதலாம் உலகப் போர்: அமெரிக்க ஜனாதிபதி வாரன் ஜி. ஹார்டிங் ஜேர்மனியுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
1934
ஜேர்மனியில் நீள் கத்திகளுடைய இரவுப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது.
1937
அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.
1940
அரண்டோரா இஸ்ட்டார் என்ற பிரித்தானியக் கப்பல் ஜேர்மனியின் யூ-47 நீர்மூழ்கியினால் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.
1940
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1962
முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966
பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் தமது முதலாவது அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
1976
வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.
1986
சிலியின் இராணுவ ஆட்சியாளர் அகஸ்தோ பினோசெட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இருவர் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1997
ஆசிய நிதி நெருக்கடி ஆரம்பமானது.
2002
உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.
2004
ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
2010
காங்கோவில் எண்ணெய் தாங்கி ஒன்று வெடித்ததில் 230 பேர் உயிரிழந்தனர்.
2013
உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.
2013
6.1 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இடம்பெற்றதில் 42 பேர் உயிரிழந்தனர், 420 பேர் காயமடைந்தனர்.
2016
பக்தாதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.




