1825
ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
1819
யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார்.
1837
இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
1843
மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1858
சார்லஸ் டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
1862
ரஷ்ய மாநில நூலகம் திறக்கப்பட்டது.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை ஆரம்பமானது.
1867
பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1873
இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
1874
முதலாவது வணிக ரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.
1881
உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவின் சென். இசுடீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1890
கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.
1903
முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.
1916
முதல் உலகப் போர்: பிரான்சின் சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1921
சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1923
கனடிய நாடாளுமன்றம் சீனக் குடியேற்றத்தை தடை செய்தது.
1931
யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
1932
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933
வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.
1942
இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது.
1947
இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
1948
முகம்மது அலி ஜின்னா பாகிஸ்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை ஆரம்பித்தார்.
1949
கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர் – கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
1958
கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.
1959
பன்னாட்டு யார், பவுண்டு மற்றும் அங்குலம், மைல், அவுன்சு ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய நாடுகளில் அமுலுக்கு வந்தது.
1960
கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது ஜனாதிபதி ஆனார்.
1960
இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
1962
ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.
1963
சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1966
கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1967
தேய்வழிவுப் போர் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே தொடங்கியது.
1968
அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
1976
போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கியது.
1978
அவுஸ்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது.
1980
“ஓ கனடா” அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.
1983
வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
1990
ஜேர்மானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
1991
பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
1997
ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2002
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
2002
தெற்கு ஜேர்மனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.
2004
காசினி – ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
2007
இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
2013
குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.
2013
நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.
2016
லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.




