1996 ஆம் ஆண்டு தான் கிருசாந்தி கொலை நடைபெற்றது. அவரைக் கொலை செய்யும் போது கிருசாந்திக்கு 18 வயது தான் ஆகின்றது. அப்போது அவள் பாடசாலையில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தாள்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில், “கிருசாந்தி மாலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவள் குற்றுயிராகக் கிடக்கும்போது கிருசாந்தியின் குழந்தையும் கொலை செய்யப்பட்டு அவளுக்கு மேல் போடப்பட்டதாகவும், அவர்களின் எலும்புக்கூடுகள் தான் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த எலும்புக்கூடுகள் கட்டி அணைத்தபடி இருந்ததாகவும்” கூறியுள்ளார்.
செம்மணியில் மூன்று அடி உயரமுள்ள எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அரைலூசனான அர்ச்சுனா சொல்லுவது போல் அந்த எலும்புக்கூடு கட்டி அணைத்த நிலையில் இருக்கவில்லை. அது ஒரு பத்து தொடக்கம் பதினொரு வயது மதிக்கத்தக்க சிறுவன் அல்லது சிறுமியினுடையதாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது.
இதுவரை செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை என்பது அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில், ஒரு சில மண்டைப்பழுதுள்ள புலம்பெயர் தமிழர்களிடம் கைதட்டு வாங்குவதற்காகவும், அவர்களிடமிருந்து நிதி வசூலிப்பதற்காகவும், தனது பெயர் செய்திகளில் வரவேண்டும் என்பதற்காகவும் அவர் வழமையாக கூறுகின்ற ஊழல் கதைகள் போன்று இப்படியான உணர்வுபூர்வமான விடயங்களிலும் குறளி வித்தை காட்டுவதை நிறுத்த வேண்டும்.
கட்டியணைத்த நிலையில் எலும்புக்கூடு இருப்பது போன்று யாரோ AI இல் செய்து பதிவிட்ட படத்தைப் பார்த்து அது உண்மை என்று நம்பி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றார்.
எந்த விடயத்தையும் சரியாக ஆராயாமல் உளறிக் கொட்டிவிட்டு பின்னர் அதற்கு விளக்கமாக ஒரு youtube வீடியோ போடுவது தான் அரைலூசனான எம்.பியின் வழக்கமான பாணி.
இவ்வாறு செம்மணி விடயத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கற்பனைக் கதைகளை கூறுவதால் செம்மணி தொடர்பான போலியான செய்திகள் தென்னிலங்கை ஊடகங்களில் பரவ விடப்படலாம். செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளும் மடை மாற்றப்படலாம்.
புலிகளின் போக்குவரத்துத் துறையில் ஊதியம் பெறும் உத்தியோகத்தராக கடமையாற்றி காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்ட தனது தகப்பன் இராமநாதனுக்காக 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எந்த ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத அரைலூசனான அர்ச்சுனா செம்மணி விடயத்தில் ஏன் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிகிறார்? என்பது சந்தேகத்துக்குரிய விடயமே. இல்லாவிடில் வழமை போன்று குட்டையைக் குழப்பவா? என்று தெரியவில்லை.
இந்தப் பைத்தியத்திடம் இருந்து கடவுள் தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.