1807
ரஷ்ய – துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான ரஷ்யக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது.
1814
மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
1864
கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.
1880
பிரான்சு தாகித்தியைக் கைப்பற்றியது.
1888
ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இஸ்ரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
1895
சாரின் ரஷ்ய அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.
1900
நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் “நோபல் அறக்கட்டளை” ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.
1914
சைபீரியாவில் கிரிகோரி ரஸ்புடின் மீது கொலை முயற்சி நடந்தது.
1950
கொரியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.
1975
ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் I கணினியை சோதித்தார்.
1976
சீசெல்சு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1995
அட்லாண்டிசு விண்ணோடம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக இணைந்தது.
1995
தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.
2002
தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற கடற்படைச் சமரில், ஆறு தென்கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர், வட கொரியப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.
2006
குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் கைதிகளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் எடுத்த முடிவை ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
2007
ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியது.
2012
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நீள்சுழற் காற்றினால் 22 பேர் உயிரிழந்தனர்.
2014
இஸ்லாமிய அரசு சிரியாவிலும் வடக்கு ஈராக்கிலும் தமது கலீபகத்தை நிறுவினர்.
2014
நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
2015
சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஆரம்பிக்கப்பட்டது.





