1995
மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
1838
விக்டோரியா ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடிசூடினார்.
1846
அடோல்ப் சக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
1881
ஆத்திரிய – செர்பியக் கூட்டணி இரகசியமாக கையெழுத்திடப்பட்டது.
1882
கினி, சியேரா லியோனி நாடுகளுக்கிடையில் எல்லை நிர்ணயிக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
1894
அமெரிக்கத் தொழிலாளர் நாள் அமெரிக்காவில் அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
1896
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 58 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1902
பனாமா கால்வாயின் உரிமைகளை கொலொம்பியாவிடம் இருந்து பெறுவதற்கான அதிகாரங்களை அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டுக்கு ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் வழங்கியது.
1904
“நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் உயிரிழந்தனர்.
1911
நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது.
1914
ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காவ்ரீலோ பிரின்சிப் என்ற பொசுனிய – செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.
1917
முதலாம் உலகப் போர்: கிரேக்கம் கூட்டு அணிகளுடன் இணைந்தது.
1919
வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜேர்மனிக்கும் முதலாம் உலகப் போரின் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
1922
ஐரிய உள்நாட்டுப் போர் டப்லினில் ஆரம்பமானது.
1926
காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உருவானது.
1940
உருமேனியாவிடம் இருந்து மல்தோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1942
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது நீலத் திட்டம் என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது.
1948
பனிப்போர்: டீட்டோ–இஸ்ட்டாலின் பிரிவை அடுத்து யுகொசுலாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.
1950
கொரியப் போர்: சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1950
கொரியப் போர்: 100,000 இற்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1950
கொரியப் போர்: கொரிய மக்கள் இராணுவம் சியோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 700-900 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1964
மல்கம் எக்ஸ் ஆப்பிரிக்க – அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.
1973
வடக்கு அயர்லாந்தில் முதற்தடவையாக தேசியவாதிகளுக்கும், ஒன்றியவாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வுக்கு வகை செய்யும் முகமாக பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1976
அமெரிக்க, ஐக்கிய இராச்சியக் கூலிப்படைகளுக்கு அங்கோலா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
1981
தெகுரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
1987
இராணுவ வரலாற்றில் முதற்தடவையாக பொதுமக்கள் மீது வேதிப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கியப் போர் விமானங்கள் ஈரானின் சர்தாசுத் நகர் மீது தாக்குதல் நடத்தியது.
2004
ஈராக்கில் இடைக்கால அரசிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. அமெரிக்கா ஆதரவு ஆட்சி முடிவுக்கு வந்தது.
2009
ஒண்டுராசு அரசுத்தலைவர் மனுவேல் செலாயா இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2016
துருக்கியின் இஸ்தான்புல் வானூர்தி நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர், 230 பேர் காயமடைந்தனர்.





