1806
டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
1954
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1806
பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர்.
1844
பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் அவரது சகோதரரும் இலினொய், கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1898
உலகை சுற்றும் முதலாவது பயணத்தை நோவா ஸ்கோசியாவைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
1905
ரஷ்ய-ஜப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற ரஷ்யப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை பர்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
1941
உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1950
கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
1954
சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
1957
டெக்சஸ்–லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1973
உருகுவை அரசுத்தலைவர் உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.
1974
அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.
1976
ஏர் பிரான்சு 139 (டெல் அவீவ்-ஏதென்ஸ்-பாரிசு) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1977
சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979
முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1980
பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.
1981
சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது “மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை” வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா சே துங் மீது குற்றஞ்சாட்டியது.
1982
கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
1988
பாரிஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
1991
சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
1994
ஜப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 660 பேர் காயமடைந்தனர்.
1998
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
2007
1997 முதல் பதவியில் இருந்த பிரித்தானியத் தலைமை அமைச்சர் டோனி பிளேர் பதவி துறந்தார்.
2013
சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
2014
ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
















