அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க நெதர்லாந்து சென்றுள்ளார்.
அச் சமயத்தில் கருத்து தெரிவிக்கையில், “ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது” என அறிவித்துள்ளார்.
மேலும் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், “ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அந்த இடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கட்டாரில் உள்ள அமெரிக்க படைத் தளத்தை ஈரான் தாக்குவதற்கு முன்னர் அங்கிருந்து வீரர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டது என நம்புகிறேன். அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக 12 நாட்கள் நடந்த போர் முடிந்தது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நான் ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் ஏற்பட்டாலும், இல்லாவிட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்பை அழித்துவிட்டோம். அவர்களால் அதனை தயாரிக்க முடியாது.
அதேநேரத்தில் அடுத்த வாரம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது ஒப்பந்தம் இடம்பெறலாம்” எனக் கூறியுள்ளார்.










