1803
கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
1830
நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.
1843
நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.
1870
ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமஸ் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
1886
ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.
1924
ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1936
முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.
1941
இரண்டாம் உலகப் போர்: சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.
1944
இரண்டாம் உலகப் போர்: சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1945
ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.
1948
முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.
1960
மடகாசுகர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1974
உலகளாவிய தயாரிப்புக் குறியீடு முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
1976
கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
1977
எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.
1978
டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1991
யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10 நாள் போரைத் தொடங்கியது.
1995
கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.
1995
அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2000
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.
2007
திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தம் கொண்டுவந்தார்.
2012
கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயின, இருவர் உயிரிழந்தனர்.
2013
சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.
2015
ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14ஆவது திருத்தத்தின் படி ஒரு-பால் இணையரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.














