சீனாவில் உருவான பெரும் வெள்ள அனர்த்தம் காரணமாக 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகின்றது. தொடர் மழையால் அந்நாட்டின் ஹூனான், ஹூபே மாகாணங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
தெற்கு சீனாவில் உள்ள குய்சூ மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதுடன் மழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் கிட்டத்தட்ட 80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோன்ஜியங், ரோன்ஜியங் நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பாயும் ஆறுகளின் நீர்மட்டம் வெகு விரைவாக உயர்ந்து கொண்டு செல்வதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
Related Posts
பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் எயார் வேய்ஸுக்கு கடும் விமர்சனம்!
பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் எயார் வேய்ஸ், பயணிகளுக்கு தேவையான பயண அனுமதிப் பத்திரங்களை ((Travel Permits) அதிக கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தை தனது...
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!
அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திட்டம் பல ஆண்டுகளாக...
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்!
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும்...
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வெப்பம்!
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, இதுவரை இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇதற்கமைய, பிரான்ஸ்...
ஜப்பானின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது டோக்கியோவிற்கு...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!
ஹோர்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட...
ஹோர்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நிறுத்தியது ஐ.நா!
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கைகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வியாழக்கிழமையன்று (25) தற்காலிகமாக நிறுத்திவைத்தது.ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக...
வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas)...
ஆப்கானிஸ்தானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை!
ஆப்கானிஸ்தானில், நீதிபதிகள் உட்பட இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துவதற்குதலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஜூன் 16 முதல் அமலுக்கு...
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 32 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் இடைக்கால...










