1856
இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1812
நெப்போலியப் போர்கள்: உருசியாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியனின் பெரும் படை நேமன் ஆற்றைக் கடந்தது.
1813
கனடா, ஒன்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது.
1821
எசுப்பானியாவிடம் இருந்து வெனிசுவேலாவின் விடுதலைக்கான போர் கரபோபோ என்ற இடத்தில் நடைபெற்றது.
1859
சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1880
கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.
1894
பிரான்சின் ஜனாதிபதி மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1902
ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு குடல்வாலழற்சியால் பாதிக்கப்பட்டதால், அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.
1913
கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.
1932
சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938
450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1939
சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
1948
பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1950
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
1963
ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.
1973
அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
1989
தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யான் சமீன் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002
தன்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.
2004
நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.
2007
கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2010
அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.
2013
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.




