கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் சிறுபோக செய்கையில் களை நெல் (பன்றி நெல்)தாக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (23) கள விஜயம் ஒன்றினை பிரதி விவசாய பணிப்பாளர் நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன்க்கு பத்தலகொட R.M.N.H சேனாநாயக்க மற்றும் உதவி விசாயப் பணிப்பாளர் , V சோதிலட்சுமி ஆகியோர் புளியம்பொக்கனை வயல் நிலங்களை பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து களை நெல்லை (பன்றி நெல்) கட்டுப்படுத்துவதற்கு பல விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சட்டிக்கலப்பை மட்டக்கலப்பை என்பன பயன்படுத்துவதன் மூலம் பன்றி நெல்லினை கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.