1930
ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
1825
பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது.
1893
அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் மோதியதில் 358 பேருடன் அக்கப்பல் கடலில் மூழ்கியது.
1897
பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
1898
எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.
1911
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
1918
அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.
1921
எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரான்சு ஜேர்மனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.
1941
இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.
1941
சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1942
இரண்டாம் உலகப் போர்: துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
1945
இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
1948
802 மேற்கிந்தியக் குடியேறிகள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.
1957
சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
1978
புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1992
வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்.
2002
ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.
2009
வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.





