1736
இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.
1734
மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.
1749
ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.
1788
நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9ஆவது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1791
பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
1898
அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.
1900
பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, ஜப்பான் ஆகியவை மீது சீனா போரை அறிவித்தது.
1919
கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
1919
இஸ்க்கொட்லாந்து, ஓர்க்னியில் ஜேர்மன் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.
1929
மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.
1930
பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1940
வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிஸ் கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.
1942
இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, ஜேர்மனியப் படையினரிடம் வீழ்ந்தது.
1945
இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
1963
கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி ஆறாம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2000
ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால் சேர்க்கையை ‘ஊக்குவிப்பது’ சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
2002
உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004
முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.
2006
புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
2009
கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
2012
ஆப்கானிய அகதிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமஸ் தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.




