1990
கல்முனைப் படுகொலைகள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1819
அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.
1837
விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.
1840
சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1858
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி – குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
1862
உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியா 35ஆவது அமெரிக்க மாநிலமாக இணைந்தது.
1877
அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறைத் தொலைபேசி சேவையை கனடா, ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.
1887
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.
1900
எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.
1921
சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சை ஊடுருவியது, ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
1942
கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.
1943
அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
1944
சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கி.மீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.
1948
கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு ஜேர்மனியில் டச்சு மார்க் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1956
வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.
1959
அரிதான சூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி கனடாவில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
1960
மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.
1973
அர்ஜென்டினா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1990
யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1990
ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.
1991
ஜேர்மனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1994
ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.
2003
விக்கி.மீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.




