1931
இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1948
ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
2007
திருகோணமலையில் “மேர்சி கோப்ஸ்” என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பைன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டார்.
1881
ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1886
பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
1917
முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜேர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
1925
சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10 நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
1934
கிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை: ஜேர்மனியத் தாங்கிகள் பிரித்தானியப் படைகளைத் தாக்கி 14 பிரித்தானியத் தாங்கிகளை அழித்தனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி வி-1 பறக்கும் வெடிகுண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.
1948
மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
1952
சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
1955
சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1977
மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளி யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டான்.
1981
லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளை சுட்டுத் தீர்த்தான்.
1982
சவூதி அரேபியாவின் மன்னராக பாகுத் முடிசூடினார்.
1983
பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.
2000
தென்கொரியாவின் ஜனாதிபதி கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்- வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
2002
ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியது.
2006
நியூ ஹரைசன்ஸ் விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் “ஏபிஎல்” என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
2010
25143 இத்தொகாவா என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் அயபூசா என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.
2012
ஈராக்கின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர்.




