1956
இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1984
மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட்டு அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தன் விடுவிக்கப்பட்டார்.
1986
மண்டைதீவுக் கடல் படுகொலைகள்: யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 கடற்தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990
இலங்கை இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
1998
முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
1801
சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
1829
இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.
1838
நியூ சவுத் வேல்சில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயக் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன.
1868
செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.
1871
கொரியாவின் கங்குவா தீவில் 109 அமெரிக்கக் கடற்படையினர் மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.
1886
நியூசிலாந்தில் டரவேரா எரிமலை வெடித்ததில் 153 பேர் உயிரிழந்தனர்.
1898
எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
1916
உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.
1918
ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் சென்ட் குரோவாசியக் கரைக்கப்பால் இத்தாலிய படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.
1935
போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
1940
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜேர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் செக் குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1945
ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
1957
கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.
1967
இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.
1982
சிரிய அரபு இராணுவம் லெபமானில் இசுரேலியப் படையினரை தோற்கடித்தனர்.
1991
11-வயது ஜேசி டுகார்ட் என்ற சிறுமி கலிபோர்னியாவில் கடத்தப்பட்டாள், இவள் 2009 வரை விடுவிக்கப்படவில்லை.
1996
வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1997
கெமர் ரூச் தலைவர் போல் போட் வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.
1999
கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
2002
இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.
2003
நாசாவின் இசுபிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2006
ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
2017
உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.





