1903
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
1936
யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.
1815
வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.
1815
லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1885
சீன – பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது.
1900
இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.
1923
பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928
அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.
1935
வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1944
இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் ஜேர்மனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.
1946
பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1953
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
1959
முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1962
தங்கனீக்கா குடியரசாகியது.
1967
ஆறு நாள் போர்: இஸ்ரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.
1972
அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.
1979
சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
1999
கொசோவோ போர்: செர்பியா – மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
2009
பாகிஸ்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
2010
ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.






