1930
இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
1958
தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் டென்னிசி, மெம்பிசு நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றின.
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிசு நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
1882
அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். ஆனாலும் இந்தச் செய்தி பொய்யானது என பின்னர் நிரூபிக்கப்பட்டது.
1889
அமெரிக்கா, சியாட்டில் நகரில் ஏற்பட்ட தீயில் நகர மையம் முழுவதும் அழிந்தது.
1912
அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
1932
அமெரிக்காவில் எரிவாயுவிற்கு முதன் முதலாக கலனிற்கு ஒரு சதம் என்ற அளவில் வரி அறவிடப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: மிட்வே சமரில் அமெரிக்கக் கடற்படை மிக்குமா என்ற ஜப்பானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1944
இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.
1968
அமெரிக்க அரசியல்வாதி இராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1971
சோவியத் ஒன்றியத்தின் சோயூசு 11 விண்கலம் ஏவப்பட்டது.
1971
கலிபோர்னியாவில் அமெரிக்க வான்படையின் எப்-4 பன்டெம் II போர் வானூர்தி பயணிகள் வானூர்தியுடன் வானில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
1971
சோயுஸ் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1974
சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.
1981
பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.
1982
லெபனான் போர் ஆரம்பமானது. இஸ்ரேலியப் படையினர் தெற்கு லெபனானை ஊடுருவினர்.
1984
இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
1993
மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
2002
10 மீட்டர் விட்டமுள்ள புவியருகு விண்பொருள் ஒன்று நடுநிலக் கடலில் கிரேக்கத்திற்கும் லிபியாவிற்கும் இடையில் வீழ்ந்து வெடித்தது.
2004
இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.





