1868
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொள்ளைக் காய்ச்சல் பரவியது.
1956
இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1958
தமிழருக்கு எதிரான வன்முறைகள் 1958: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
1974
ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவரே ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
1979
இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
1829
பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது.
1832
லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
1849
டென்மார்க் முடியாட்சி அரசியலை ஏற்றுக் கொண்டது.
1851
ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்வின் அடிமை முறைக்கெதிரான அங்கிள் டாம்’ஸ் கேபின் என்ற 10-மாதத் தொடர் வெளிவர ஆரம்பித்தது.
1862
தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
1873
சான்சிபார் சுல்தான் பர்காசு பின் சயீது மிகப்பெரும் அடிமை வணிகச் சந்தையை பிரித்தானியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் மூடினார்.
1900
இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
1915
டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1916
முதலாம் உலகப் போர்: உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.
1942
இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
1944
இரண்டாம் உலகப் போர்: நார்மாண்டி படையிறக்கம் ஆரம்பம்: ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் ஜேர்மனியின் அத்திலாந்திக் சுவர் மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.
1945
ஜேர்மனி கூட்டுப் படைகளின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1946
சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.
1959
லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1963
அயொத்தொல்லா ரூகொல்லா கொமெய்னியை ஈரான் அரசுத்தலைவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கைது செய்ததை அடுத்து ஈரானில் கலவரம் வெடித்தது.
1967
ஆறு நாள் போர் ஆரம்பம்: இஸ்ரேலிய வான்படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1968
ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் இராபர்ட் எஃப் கென்னடி பாலத்தீனர் ஒருவனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
1969
அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
1981
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஐந்து பேர் மிக அரிதான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே எயிட்சுக்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.
1983
உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் என்ற பயணிகள் கப்பல் உலியானவ்சுக் நகரத் தொடருந்துப் பாலம் ஒன்றில் மோதியதில் நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1984
புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995
போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
1997
காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
2000
காங்கோவில் உகாண்டா, ருவாண்டா படையினரிடையே ஆறு-நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.
2003
பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் வெப்பக்காற்று வீசியதில், வெப்பநிலை 50 °C ஐ எட்டியது.
2004
பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.
2006
செர்பியா-மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.
2009
பெருவில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2013
அமெரிக்கா, பிலடெல்பியாவில் கட்டடம் ஒன்று உடைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.
2015
மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவு நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
2017
மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29ஆவது உறுப்பினராக இணைந்து கொண்டது.
2017
பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள் – பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யெமன், ஐக்கிய அரபு அமீரகம் – கத்தார் உடனான உறவைத் துண்டித்தன.






