1958
இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.
1981
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது இனந்தெரியாதோரால் சுடப்பட்டு, அடுத்த நாள் உயிரிழந்தார்.
2000
இலங்கையில் நோர்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2007
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற் படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
2007
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற ஜேர்மனியின் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1962
மேர்க்குரித் திட்டம்: அமெரிக்க விண்ணோடி ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை அவ்ரோரா 7 விண்பெட்டகத்தில் மூன்று முறை வலம் வந்தார்.
1967
இஸ்ரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
1981
எக்குவடோர் அரசுத்தலைவர் யைம் அகிலேரா, அவரது மனைவி, அவரது குழுவினர் விமான விபத்தில் இறந்தனர்.
1982
ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.
1991
எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை தனது நாட்டுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1992
தாய்லாந்தில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அந்நாட்டின் கடைசி சர்வாதிகாரி சுச்சின்டா கிரப்பிரயூன் பதவி விலகினார்.
1992
பொசுனியா எர்செகோவினாவில் கொசாரக் பகுதியில் செர்பிய இராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது.
1993
எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
1994
நியூயார்க், உலக வர்த்தக மையத்தில் 1993 ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட நால்வருக்கு 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1999
கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2000
22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.
2006
விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.
2014
பெல்ஜியம், பிரசெல்சு நகரில் யூத அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.
2014
கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையில் ஏஜியன் கடலில் 6.4 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது. 324 பேர் காயமடைந்தனர்.




