2008
இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1813
தென்அமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத் தன்னை அறிவித்தார்.
1829
வியன்னாவில் சிரில் டேமியன் என்பவருக்கு அக்கார்டியனுக்கான காப்புரிமம் வழங்கப்பட்டது.
1844
பாரசீக மதகுரு பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. பகாய் சமயத்தவர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர்.
1846
மெக்சிக்கோ – அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் மரியானோ பரேதசு அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தார்.
1911
நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
1915
முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.
1932
பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1939
அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிச் இம்லர் நேச நாடுகளின் கைதியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.
1948
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.
1949
பனிப்போர்: மேற்கு ஜேர்மனி என்ற நாடு அமைக்கப்பட்டது.
1951
திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.
1958
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1960
சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.
1992
இத்தாலியின் மாஃபியாக்களுக்கு எதிரான நீதிபதி கியோவானி பால்க்கோனி, அவரது மனைவி உட்பட ஐவர் சிசிலியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1993
எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1995
ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
1998
வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
2006
அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.
2008
அனைத்துலக நீதிமன்றம் “நடுப் பாறைகள்” என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29 ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.
2014
காங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க் குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.
2016
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் யெமன், ஏடன் நகரில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2016
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் வரையானோர் காயமடைந்தனர்.




