1834
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது.
1958
இலங்கை இனக் கலவரம்; இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பல இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1972
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்று, பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
1809
வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1816
இங்கிலாந்து, லிட்டில்போர்ட் என்ற இடத்தில், அதிக வேலையின்மை, மற்றும் தானிய விலை ஏற்றம் ஆகியவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1840
நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
1848
மர்தீனிக்கில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1856
தென் கரொலைனாவின் அமெரிக்கக் காங்கிரசு உறுப்பினர் பிரெஸ்டன் புரூக்சு மாசச்சூசெட்ஸ் மாநில செனட்டர் சார்ல்சு சம்னரை அமெரிக்காவில் அடிமைத்தொழில் பற்றி உரையாற்றியமைக்காக மேலவை மண்டபத்தில் வைத்து பிரம்பால் கடுமையாக தாக்கப்பட்டார்.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் ஆட்சன் துறைமுகம் மீதான தமது 48 நாள் முற்றுகையை ஆரம்பித்தன.
1900
அசோசியேட்டட் பிரெசு நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
1906
ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915
இஸ்க்கொட்லாந்தில் மூன்று தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.
1926
குவோமின்டாங் சீனாவில் சங் கை செக் பொதுவுடைமைவாதிகளை பதவியில் இருந்து அகற்றினார்.
1927
சீனாவில் சினிங் அருகே 8.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1939
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1941
ஆங்கிலேய – ஈராக்கியப் போர்: பிரித்தானியப் படைகள் பலூஜா நகரைக் கைப்பற்றின.
1942
இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1943
ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தைக் கலைத்தார்.
1957
பல்கலைக்கழகங்களில் இனவொதுக்கலை தென்னாப்பிரிக்க அரசு அங்கீகரித்தது.
1960
தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1962
அமெரிக்காவின் போயிங் 707 விமானம் மிசூரியில் குண்டுவெடிப்பில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 45 பேரும் உயிரிழந்தனர்.
1967
எகிப்து டிரான் நீரிணையை இஸ்ரேலியக் கப்பல்கள் செல்லத் தடை விதித்தது.
1967
பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் உயிரிழந்து, 150 பேர் காயமடைந்தனர்.
1968
அமெரிக்க அணு-ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் உயிரிழந்தனர்.
1987
உத்தரப் பிரதேசம், மீரட் நகரில் 42 முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1987
முதலாவது ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் நியூசிலாந்து, ஓக்லாந்து நகரில் நடைபெற்றது.
1990
வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990
விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
1992
பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.
2010
ஏர் இந்தியா எக்சுபிரஸ் போயிங் 737 மங்களூரில் வீழ்ந்ததில் 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.
2011
அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 162 பேர் உயிரிழந்தனர்.
2015
அயர்லாந்து குடியரசு உலகின் முதலாவது நாடாக ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
2017
மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017: அரியானா கிராண்டி இசை நிகழ்ச்சியில் குண்டு வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
2018
தூத்துக்குடி படுகொலைகள்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.




