1851
கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1856
அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
1864
ரஷ்ய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது. பெரும்பாலான சிர்க்கேசியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
1864
இயோனியத் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.
1871
பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிசைத் தாக்கின. ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1871
முதலாவது பற்சட்டத் ரயில் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.
1881
அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1904
பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
1917
அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1937
ஆர்க்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.
1939
கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
1941
இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1961
குடிசார் உரிமைகள் இயக்கம்: அலபாமாவில் நடந்த இன வன்முறைகளை அடுத்து அங்கு இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1966
வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.
1972
மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம் உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
1976
கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
1991
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1991
எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1994
யெமன் சனநாயகக் குடியரசு யெமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.
1996
தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1998
இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
2001
பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத் தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2003
வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.
2006
செர்பியா-மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2012
யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.




