1869
யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.
1802
பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை மீண்டும் கொண்டுவந்தான்.
1813
நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கென்டக்கி மாநிலம் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 3 இல் கூட்டமைப்புப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை இந்நிலை நீடித்தது. வட கரொலைனா ஒன்றியத்தில் இருந்து விலகியது.
1873
லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1875
அனைத்துலக முறை அலகுகள் முறைமையை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 17 நாடுகள் கையெழுத்திட்டன.
1882
ஜேர்மானியப் பேரரசு, ஆஸ்த்திரியா-அங்கேரி, இத்தாலி இராச்சியம் ஆகியன முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1883
கிரக்கத்தோவா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் 36,000 பேர் உயிரிழந்தனர்.
1891
திரைப்பட வரலாறு: தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக் கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1902
ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் பால்மா முதலாவது ஜனாதிபதியானார்.
1927
மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசின் ஹெஜாஸ், நாச்து இராச்சியங்கள் மீதான இறைமையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. இவை பின்னர் சவூதி அரேபியா இராச்சியமானது.
1940
பெரும் இன அழிப்பு: முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை: ஜேர்மனியப் படைகள் கிரீட் நகரைக் கைப்பற்றின.
1948
சீனக் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக சங் கை செக் தேர்தெடுக்கப்பட்டார்.
1956
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் போடப்பட்டது.
1964
பிரபஞ்ச நுண்ணலைக் கதிர்வீச்சை இராபெர்ட் உட்ரோ வில்சன் கண்டுபிடித்தார்.
1965
எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தானிய வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1971
பாகிஸ்தான் படைகள் சுக்நகர் என்ற இடத்தில் வங்காள இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
1980
கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 சதவீதத்தினர் வாக்களித்தனர்.
1983
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி தீ நுண்மங்களைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1983
தென்னாப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவில் உம்கொன்ரோ வெய் சிசுவே இயக்கத்தினரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர், 217 பேர் காயமடைந்தனர்.
1985
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கியூபாவுக்கான வானொலி சேவையை ஆரம்பித்தது.
1989
தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: சீனாவில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1990
உருமேனியாவில் கம்யூனிச ஆட்சிக்குப் பின்னர் முதல்தடவையாக அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
2002
கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐ.நாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
2012
வடக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
2013
அமெரிக்காவில் ஒக்லகோமா நகரில் வீசிய சுழற்காற்றினால் 24 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.




