1834
இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
1978
விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1802
பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.
1828
அமெரிக்க ஜனாதிபதி ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
1848
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1919
முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில் தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1934
பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.
1950
இஸ்ரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.
1950
பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.
1961
சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.
1961
அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
1971
சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1991
குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
2012
சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2016
எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில் நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.
2018
வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல் மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.














