அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம், மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வந்த தமிழ் குடும்பமான சசிகுமாரின் குடும்பம், அங்குள்ள பொருளாதார சிக்கலால் தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றது. அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவையும், உணர்வும் கலந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பதிவு செய்துள்ளது.
ரூ. 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அதன் விளைவாக திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 6 நாட்களில் இப்படம் ரூ. 24 கோடி வரை வசூல் செய்து வசூல் வேட்டையில் வெற்றி பெற்றுள்ளது.