உண்மைகளையும் உணர்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான தீப்பந்தம் 30 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இலங்கையில் பல இடங்களிலும் லண்டன், கனடா, சுவிஸ், நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளிலும், முக்கிய திரையரங்குகளின் பெரிய திரைகளில் திரையிடப்படுகிறது.
லண்டன் AMLUS தயாரிப்பில், BLCKBOARD INTERNATIONAL படக்குழுமத்தால், இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த ஈழத்துத் தமிழ்க் கலைஞர்களையே முழுக்க முழுக்க, வைத்து எடுக்கப்பட்ட படம் தீப்பந்தமாகும்.
முக்கியமான கருப்பொருளைக் கொண்டு காலத்தின் தேவைகருதி வெளிவரும் இப்படம் ஈழத்துத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சிறப்பான இடத்தினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே BLCKBOARD INTERNATIONAL படக்குழுமத்தால் எடுக்கப்பட்ட ‘டக் டிக் டொஸ்’, ‘புத்தி கெட்ட மனிதன்’ ஆகிய திரைப்படங்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வெற்றிகரமாக ஓடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
