இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் விருதை பெறுகிறார். இது இப்படத்திற்காக இவர் பெறும் 2-வது விருதாகும்.
முன்னதாக, லண்டசன் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்புக்கான விருதும், நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT