1870
இலங்கை, புறக்கோட்டையில் முஸ்லிம்களின் கலவரம் இடம்பெற்றது.
1803
லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியது.
1812
லூசியானா அமெரிக்காவின் 18ஆவது மாநிலமாக இணைந்தது.
1838
நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1897
ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.
1900
அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1937
பிலிப்பைன்ஸ் பொதுநலவாயம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 சதவீதத்தினர் ஆதரவாக வாக்களித்தனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: கிட்லர் தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் ஜேர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க – பிரித்தானியப் படையினரை சோவியத் செம்படை விடுவித்தது.
1948
கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.
1955
இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.
1961
கே-19 என்ற முதலாவது சோவியத் அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1975
வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1980
யூலியானா முடிதுறந்ததை அடுத்து பீட்ரிக்சு நெதர்லாந்தின் அரசியாக முடிசூடினார்.
1980
இலண்டனில் ஈரானியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
1982
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1982
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படு கொலை செய்யப்பட்டனர்.
1993
உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
1999
ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006
ஆப்கானித்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2008
ரஷ்யாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் ரஷ்யாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2009
நெதர்லாந்தில் அரசி பீட்ரிக்சு மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
2012
இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
2013
நெதர்லாந்தில் பீட்ரிக்சு முடிதுறந்ததை அடுத்து, வில்லியம்-அலெக்சாந்தர் மன்னராக முடிசூடினார்.














