தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பும் பருத்தித்துறை பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் அறிமுகமும் வடமராட்சி கிழக்கில் விமர்சையாக நடைபெற்றது.
மே மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியினரின் பருத்தித்துறை பிரதேச சபைக்கான 10, 11, 12ம் வட்டாரத்திற்கான வேட்பாளர் அறிமுகம் நேற்று முன்தினம்(25) வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியினரின் காரியாலயத்தில் மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
இவ் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமராட்சி கிழக்கில் இருந்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
மக்கள் சந்திப்பின் பின் கடற்றொழில் அமைச்சரிடம் பல கோரிக்கைகளை கூறி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் கோரிக்கை கடிதங்களும் வழங்கிவைக்கப்பட்டது.



