அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் தொற்றா நோய்கள் பற்றிய பொதுமக்களுக்கு விழி்ப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் திருமதி.Dr இசடீன் மற்றும் தொற்றா நோய்கள் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.இர்சாட் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் 2025/04/26 திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr.பி .மோகனகாந்தன் அவர்களின் தலைமையில் தம்பிலுவில் சாய்சாலையில் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்ப்பட்டது. அதன் ஊடாக மக்களுக்கான தொற்றா நோய்கள் பரிசோனையும், அதற்கு ஏற்ற அறிவுரைகளும் நிகழ்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொற்றா நோய்கள் வருவதை தடுப்பதற்கான துவிச்சக்கரவண்டிப் பயணம் ஒன்றும் இடம்பெற்றது. குறித்த பயணம் தம்பிலுவில் 01 பிரதான வீதியில் இருந்து ஆரம்பமாகி திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரி, காரியால உத்தியோத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



