• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நூலகத்தின் முக்கியத்துவத்தை யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.!

Mathavi by Mathavi
May 13, 2025
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள்
0
நூலகத்தின் முக்கியத்துவத்தை யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.!
Share on FacebookShare on Twitter

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் – சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்.

தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ இன்று செவ்வாய்க்கிழமை (13.05.2025) திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ந.வில்லியம் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் சிறப்பு விருந்தினராகவும், தீவக வலய கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி நூலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்து நினைவுக் கல்லையும் திரை நீக்கம் செய்தார். இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றன. இதன்போது ‘நெய்தலின் ஊற்று’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தை கட்டுவதற்கு அன்பளிப்புச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2021ஆம் ஆண்டு நூலகத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டு அண்ணளவாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தனது பிரதம விருந்தினர் உரையில் ஆளுநர் தெரிவித்ததாவது,

இந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் கட்டுமானங்கள் எல்லாம் சீர்குலைந்துபோனது. இடப்பெயர்வுடன் பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள் இன்று எமது கிராமமும், சமூகமும் முன்னேற வேண்டும் என்பதற்காக இத்தகைய அளப்பெரிய உதவியைச் செய்திருக்கின்றார்கள்.

நான் எல்லா இடங்களிலும் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறிவருகின்றேன். தலைமைத்துவம் எங்கு சரியாக இருக்கின்றதோ அந்த நிறுவனம் உயர்வை நோக்கிச் செல்லும். இது அரசாங்க நிறுவனத்துக்கு மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

சில பாடசாலைகளின் அதிபர்கள் கணக்குகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையையுடன் நடந்துகொள்வதில்லை. அவ்வாறான அதிபர்களின் தலைமைத்துவக் குறைபாட்டால் அந்தப் பாடசாலைக்கு உதவிகளைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதனால் பாடசாலை பௌதீக ரீதியிலோ எந்தவொரு வகையிலுமோ வளர்ச்சியடைய முடியாத நிலைமை இருக்கின்றது. ஆனால் உங்கள் பாடசாலையின் அதிபர் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர் சமூகம் பல உதவிகளைச் செய்திருக்கின்றது. இதைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற வேண்டும்.

பாடசாலைக்கான வகுப்பறையின் தேவை உள்ளிட்ட சில விடயங்களை அதிபர் கோரியிருந்தார். உங்களின் கல்வித் தரம் உயர்வதற்கு எங்களாலான முயற்சிகளைச் செய்வோம். அடுத்த ஆண்டிலாவது உங்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு நாம் நிச்சயம் முயற்சிப்போம், என்றார் ஆளுநர்.

மேடை நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலையில் புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள  பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்

வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்

by Bharathy
May 12, 2026
0

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளான ஆர்.மேரி தயானா மற்றும் எஸ். தமிழினி ஆகிய இரு மாணவிகளும்...

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் காணி பங்கீடுகள் அமைய வேண்டும்.!

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் காணி பங்கீடுகள் அமைய வேண்டும்.!

by Mathavi
May 12, 2026
0

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளை பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!

by Mathavi
May 12, 2026
0

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி' இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த்...

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு; தலையில் கை வைத்த சுமந்திரன்.!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு; தலையில் கை வைத்த சுமந்திரன்.!

by Mathavi
May 12, 2026
0

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

by Mathavi
May 12, 2026
0

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

by Mathavi
May 12, 2026
0

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...

எயார்பஸ் மோசடி விவகாரம்; இரண்டரை மணிநேரம் மஹிந்தவிடம் தீவிர விசாரணை.!

எயார்பஸ் மோசடி விவகாரம்; இரண்டரை மணிநேரம் மஹிந்தவிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 12, 2026
0

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்.!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 12, 2026
0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார்...

ஹட்டனில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தினம்.!

ஹட்டனில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தினம்.!

by Mathavi
May 12, 2026
0

இன்று 12 ஆம் திகதி காலை ஹட்டனில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. உலக செவிலியர் சேவையின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளுடன் ஒத்துப்போகும் சர்வதேச செவிலியர்...

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

by Mathavi
May 12, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாக பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி