பொலன்னறுவை – அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அரலகங்வில,கெகுலுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபர் ஆவார்.
இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.