கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றம் தேர்தல் பிராசார கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று(25) இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜீவன் தொண்டமான் மேற்கன்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் உறையாற்றுகையில்…
சிந்தித்து பாருங்கள் ஒரு சமூகமாக நமக்கு எமது வரலாறு தெரியவில்லை, மாறாக எம்மிடத்தில் திணிக்கப்பட்ட வரலாறு மட்டும் தான் தெரிகின்றது.
இன்றைய சூழ்நிலையில் சம்பள பிரச்சினையை பொறுத்தமட்டில், 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தீர்கள். எனக்கு இராஜாங்க அமைச்சு பதவியும் வழங்கினார்கள். அதன் பிறகு எனக்கென்றும் நாடாளுமன்றத்தில் நூறு, இருநூறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை, மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்கள் மட்டும் இருந்தார்கள். நான் அந்தஸ்துள்ள அமைச்சரவையில் இல்லை இராஜாங்க அமைச்சு மட்டும் தான், இரண்டு பேர் மட்டுமே ஆனாலும் 6 மாத காலப்பகுதிக்குள் எந்தவித போராட்டமும் இல்லாமல் 1000 ரூபா சம்பளத்தை உங்களுக்கு பெற்றுத் தந்தோம்.
2023 இல் மீண்டும் நாங்கள் பேச்சு வார்த்தையினை தொடங்கினோம். அன்றைக்கு நாங்கள் கூறினோம் 1700 ரூபாய் தருவதாக. அதன் பயனாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை பெருந்தோட்ட நிறவனங்களுடன் நடாத்தி இறுதியாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுதந்தோம்.
மேலும் நாங்க அரசாங்கத்துடன் இருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் காணி உரிமைகளை வழங்குவதற்கு 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டிருந்தோம். அரசாங்க மாற்றத்தின் பின்னர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது? எங்களுடைய மக்களுக்கு வீட்டுரிமையும், காணி உரிமையினையும் வழங்குவதே அவர்களுக்கான நிரந்தர தீர்வாகும்.
அத்தோடு பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் துறையை மேம்படுத்த இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 19 ஆசிரியர்களை வரவழைத்து மலையக ஆசிரியர்களுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்துறைகளில் விசேட பயிற்சிகளை வழங்கினோம். மேலும் மலையகத்தில் உள்ள 26000 முன்பள்ளி மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கினோம்.
மேலும் தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை இ.தொ.கா விடுத்துள்ளது. அதாவது மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை மக்களை சந்துத்து கலந்துரையாட வேண்டும், அவர்களின் பிரச்சினைகள் ஆராய்ந்து தீர்க்கப்படவேன்டும் போன்ற மக்கள் நலன்சார்ந்த பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது அதை மீறும் பட்சத்தில் குறித்த வேட்பாளரின் பதவி மூன்று நாட்களில் பறித்து புதிய உறுப்பினர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நிரந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாகும்.
இப்பிரச்சார கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் அனுசியா சிவராஜா, குறித்த பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பேட்பாளர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



