மகியங்கனைப் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகியங்கனை நகரின் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி சந்திக்கு அருகே இன்று காலை குறித்த பேருந்து இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பிரேக் பொறிமுறை சரியாக செயற்படாத காரணத்தினால் பாதையோரமாக இருந்த மண் திட்டு ஒன்றில் மோதியே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் மகியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் பாடசாலை மாணவர்கள் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.