பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று அதிரடியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடநை்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.
இந்த தாக்குதல் இந்தியா மட்டுமின்றி மொத்த நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்பட பல உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. இருநாடுகள் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால் இந்தியாவுடன் நாங்கள் துணை நிற்போம் என்று இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் இந்தியாவுடன் நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம். இது தான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.