மாங்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள A9 வீதி, மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியில் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது இன்றைய தினம் (24) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது, சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்கள் மூடப்பட்டதுடன் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு செய்யப்பட்டிருந்தன. குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கை விடுக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT