• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழர் காணிகளுக்கு காலக்கெடு கொடுத்து அரச உரிமை கோரி அதில் குடியேற்றங்களை அமைக்கப் போகிறார்கள்.!

Mathavi by Mathavi
May 10, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழர் காணிகளுக்கு காலக்கெடு கொடுத்து அரச உரிமை கோரி அதில் குடியேற்றங்களை அமைக்கப் போகிறார்கள்.!
Share on FacebookShare on Twitter

தமிழர் காணி சம்மந்தப்பட்ட விடயத்தை நியாயம் இல்லாமல் 3 மாத காலக்கெடு வழங்கி அரச உரிமை கோர முயல்வது அந்த காணிகளை இயற்கை நீதிக்கு புறம்பாக பறித்து அந்த காணிகளை குடியேற்றங்களுக்கு பயன்படுத்தப் போகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிததுள்ளார்.

நேற்று முன்தினம் (08.05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. விசேடமாக வடமாகாணத்தில் 4 மாவட்டத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 3669 ஏக்கரும், முல்லைத்தீவில் 1703 ஏக்கரும், கிளிநொச்சியில் 515 ஏக்கரும், மன்னாரை சேர்ந்த 54 ஏக்கருமாக மொத்தம் 5941 ஏக்கர் காணிகளை தனியார்கள் தங்களுக்குரிய காணி உறுதிகளை உறுதிப்படுத்தாத பட்சத்தில் அதனை அரச காணிகளாக பிரகடனப்படுத்த போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு சமமான சனத்தொகை இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்த தீவை விட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே வெளியேறினார்கள். அவர்களது அனைத்து சொத்துககளையும் விட்டு பெரும்பான்மையானவர்கள் அந்த நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கேட்கும் நிலை தான் இருந்தது.

இந்த காணிகளின் சொந்தக்காரர்கள் பலர் அந்த நாடுகளில் இருந்து திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் சில மக்களின் காணிகளை உறுதிப்படுத்த முடியாத நிலையும் இருக்கிறது. இதனை முதல் இருந்த அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்டு அவர்கள் முதல் இருந்த காணியில் இங்கு போர்க் காலத்தில் புதிதாக இருந்தவர்கள் உரிமை பெற முடியாத வகையில் சட்டத்தை வைத்திருந்தார்கள்.

புலம்பெயர் மக்களின் காணிகளுக்கு அநீதி நடைபெறும் என்பதற்காகவே அவை நிறுத்தப்பட்டன. இந்த அரசாங்கம் முதல் இருந்த அரசாங்கங்களை இனவாதி என்றார்கள். அவர்களே அந்த காணிகளை அபகரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்கள். அங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டார்கள். இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்காமல் அமுல்ப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காணி உரிமையாளர்கள் இந்த மூன்று மாதத்திற்குள் காணி உறுப்பத்திரங்களை உறுதிப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.

இது புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றி கதைக்கின்றோம். தற்போது வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கூட உரிமை கோரக் கூடிய நிலையில் இருந்தும் அவர்கள் பல தடவை இடம்பெயர வேண்டிய நிலை இருந்தது. போர் காரணமாக தமது அனைத்து சொத்துக்களையும் விட்டு ஓட வேண்டி வந்தது. அப்படிப்பட்ட நிலையில் இந்தக் காணிகளை உரிமை கோருமாறு கோருவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமா?. இந்தக் காணி சம்மந்தப்பட்ட பிரச்சினை தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையுடன் சம்மந்தப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இது இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா?

தமிழர் காணி சம்மந்தப்பட்ட விடயத்தை நியாயம் இல்லாமல் 3 மாத காலக்கெடு வழங்கி அரச உரிமை கோர முயல்வது அந்த காணிகளை இயற்கை நீதிக்கு புறம்பாக பறித்து அந்த காணிகளை குடியேற்றங்களுக்கு பயன்படுத்தப் போகிறார்கள். இதனை நான் பொறுப்போடு கூறுகின்றேன். இந்த அரசாங்கம் விடயம் விளங்காமல் அவசரமாக செய்யும் விடயம் அல்ல. நான் இதற்கு முதல் பல தடவை இந்த நாடாளுமன்றத்திலும், வெளியிலும் சுட்டி காட்டி வருகின்றேன். வட-கிழக்கில் இருக்கும் இராணுவம், முப்படை முழுக்க அங்கு இருக்கும் தமிழ் மக்களை எதிரி என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்.

முதல் இருந்த அரசாங்கம் போல் இந்த அரசாங்கமும் அந்த மக்களுடைய உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை எனில் அந்த மக்கள் சிலவேளை போராட முயற்சிக்கலாம் என்ற பயத்தால் தமிழர் தாயக கரையோர பிரதேசங்கள் அனைத்தையும் போர்க்காலத்தில் கடற்தொழில் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி பொருளாதார தடை இருந்தது. அதனால் அந்த மக்கள் வாழ முடியாத நிலையில் வெளியேறினார்கள். பேர்க்காலத்தில் இதை தான் செய்தீர்கள்.

அந்த மக்களுடைய நிரந்தர உரிமைகளை அழிக்கின்ற, பறிக்கின்ற செயற்பாட்டை இந்த அரசாங்கம் செய்யப் போகின்றது. முதல் இருந்த அரசாங்கங்கள் எல்லாம் இனவாதிகள், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று சொல்லி தம்மை புனிதர்களாக காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இந்த அநியாயத்தை செய்யப் போகிறார்கள் என்பதை பொறுப்போடு சொல்கின்றேன்.

இதுவெறுமனே தமிழர்களை குறி வைக்கும் விடயமல்ல. தமிழ் பேசும் மக்களை குறிவைக்கும் விடயமாக மாறும். வேணும் என்றால் எழுதி வையுங்கள். இன்று வடக்கு மாகாணத்தை குறிவைக்கும் இவர்கள், அடுத்து இது கிழக்கு மாகாணத்திற்கும் போகும்.

இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. இந்த இராணுவத்தின் தமிழ் விரோத செயற்பாட்டை நிறுத்த, இராணுவத்தின் மனோ நிலைய மாற்ற இவர்களுக்கு ஏலாது. அல்லது இவர்களும் இராணுவத்தின் மோசமான இனவாத செயற்பாடுகளுக்கு துணை போகும் வகையில் செயல்படுகிறார்கள் என்று தான் பார்க்கலாம்.

இந்தத் தேர்தலில் இந்த அரசாங்கம் வடக்கு – கிழக்கில் சந்தித்து இருக்கின்ற பாரிய பின்னடைவை சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை சரியாக புரிந்து இந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும். காணி சம்பந்தமான பிரச்சினை தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினை. இதில் தமிழ் மக்கள் தலைவர்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வராமல் செய்யுமாக இருந்தால் மீண்டும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கும், தெற்கில் வாழும் தெற்கு மக்களுக்கும் ஏற்பட்டு வரும் நல்லிணக்கத்தை குழப்பும் விடயமாக தான் இருக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் எதிரி ஆக்கப் போகிறீர்கள் எனத் தெரிவித்தார்.

Related Posts

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

by Mathavi
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

by Mathavi
June 16, 2026
0

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள்...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி