கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.எனினும் ரயில் பயணிகளுக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லையென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT