• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

Mathavi by Mathavi
May 12, 2025
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசாங்கமும் தமிழ்த் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்க நடந்துகொள்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்க அரசும் சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களான தயாளகௌரி, டினேஸ், தனுபிரதீப் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சத்துருக்கொண்டான் படு கொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் மற்றும் சத்துக்கொண்டான் படு கொலையில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக விளக்கேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டதை தொடர்ந்து உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
எங்கெங்கு தமிழர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்களோ அங்கு எல்லாம் இன அழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்று வருகினறன. இந்த சத்துக்கொண்டான் பகுதியிலே பாரிய படு கொலைகள் நடாத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றது. ஒரு இன அழிப்பு நோக்குடன் வடகிழக்கில் பல படு கொலைகள் நடாத்தப்பட்டதுடன் எமது விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்காக பல இடங்களில் படு கொலைகள் நடாத்தப்பட்டிருந்தது.

சத்துருக்கொண்டானின் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொண்டுசெல்லப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகள் பின்னர் முடக்கப்பட்டது.
இன்று இந்த அரசாங்கம் பட்டலந்த வதைமுகாம் விடயங்களை கையிலெடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள முன்னெடுத்திருக்கும் அதேநேரம் வடகிழக்கில் பல இடங்களில் படு கொலைகள் நடைபெற்ற வரலாற்றின் சாட்சியங்களாகவும், ஆவணங்களாகவும் இருக்கின்றபோதிலும் அது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமல் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கு தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான உறுதிப்பாடற்ற நிலையிலே அவர்களுக்கான நியாயமான உரிமைகள், அவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கான உறுதிப்பாடுகள் இல்லாத நிலையிலேயே சிங்கள பௌத்த தேசிய அரசுகள் நடந்துகொள்கின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலே பொதுமக்கள் கொத்துக்கொத்தாக இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவமானது தமிழினத்தினை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்கும், வடகிழக்கு தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைத்து கையேந்தும் நிலையிலேயே நிர்க்கதியற்ற நிலையில் தமிழ் மக்கள் வாழவேண்டும். தமிழ் மக்கள் தமது உரிமைகளை இனி ஒருபோதும் போராடி கேட்கக் கூடாது என்ற அடிப்படையிலே பல்வேறு திட்டமிட்ட படு கொலைகள் நடந்தேறியது.

இந்த படு கொலைகளுக்கான நீதி நியாயம் கூட எந்தவகையான வழிகளிலும் நடைபெறவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16வருடங்க்ள கடந்துள்ள நிலையிலும் நீதி நியாயத்திற்காக தமிழ் தேசிய சக்திகள் தமிழ் இனத்தில் பற்றுக்கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கின்ற போதிலும் அதற்கான எந்த அங்கீகாரத்தினையும் இந்த நாடு வழங்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நியாயமாக, நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்துள்ளது.

இன்று இந்த பொருளாதார நெருக்கடிக்கு கூட தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக அடக்கி ஒடுக்கப்படுதலே காரணமாக அமைந்திருக்கின்றது. இவற்றினை சிங்கள தேசிய இனம் புரிந்துகொள்ளாத நிலையில் இந்த நாடு சுபீட்சமான நாடாக மாறுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்க அரசும் சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு இனத்தின் விடுதலையானது, ஒரு இனத்தின் இருப்பானது மிக காத்திரமான முறையில் ஒரு அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படாவிட்டால் நாட்டில் மக்கள் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் வாழும் நிலையேற்படும். அந்தவகையில் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதி நியாயம் கிடைக்கவேண்டும். இந்த சம்பவங்கள் எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.

இவ்வாறான படு கொலைகளும் அடக்குமுறைகளும் கடந்தகாலத்தில் நடைபெற்றது என்பதை எதிர்கால சந்திக்கு கொண்டுசென்று எமது தமிழ் தேசியத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தினையும் தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டத்தினையும் எமது இளம் சந்ததிகள் தெரிந்துகொள்ளவேண்டும் அதனை முன்கொண்டு செல்லவேண்டும்.

Related Posts

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

by selvan
June 13, 2026
0

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து...

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

by selvan
June 13, 2026
0

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி ஒருவருக்கு இரண்டு நாள்கள் பணி இடைநிறுத்தம் செய்து வடக்கு...

சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்த நபருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும்...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் பகுதியில், சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பகுதியில் நேற்று...

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் காணாமற்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

by selvan
June 13, 2026
0

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிதுள்ளர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்...

குழந்தையை கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து விபத்தில் உயிரிழப்பு!

by selvan
June 13, 2026
0

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் அவுலேகம பகுதியைச்...

பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வல்லிபுரக்குறிச்சி பகுதியைச்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு, இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக...

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

by selvan
June 13, 2026
0

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வாகனமும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி