தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அலுவலகங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச வேட்பாளர்களின் அலுவலகங்கள் தம்பட்டை மற்றும் விநாயகபுரம், தம்பிலுவில் ஆகிய பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்கள் மற்றும் இணைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT


