நுவரெலியா மாவட்டத்தில் கந்தபொல பகுதியிலும் நுவரெலியா ராகல பகுதியிலும் இன்று கனத்த மழை பெய்துள்ளது.
இன்று பெய்த கன மழை காரணமாக கந்தபொல பகுதியில் கல்பாளம் அருகில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ் வழியாக செல்லும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
ADVERTISEMENT
அத்துடன் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ள நீர் புகுந்து சேதமாகி உள்ளது என அப் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


