வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு (21) போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 23 கிராம், ஹெரோயின் 6 கிராம், கேரளா கஞ்சா 13 கிராம் என்பன கைப்பற்றுள்ளன.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திரு. லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் திரு. அசங்க (SI) தலைமையிலான திரு.சம்பத் (68569), திரு.தினேஷ் (8656), திரு.மஞ்சுல (39219), குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த திரு.கபில, திரு.பயாஸ் ஆகியோர் அடங்கிய விஷேட பொலிஸ் குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் இப்பிரதேசத்திலுள்ள பிரபல போதை வியாபாரியான பெண்ணின் வலது கையாகச் செயற்பட்டு வந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.