சிவனடி பாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று இரவு முதல் தற்போது வரை சுமார் ஒரு லட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொருப்பதிகாரி சாந்த வீரசேகர மேலும் கூறுகையில்,
தொடர்ந்து வரும் விடுமுறை காரணமாகவும் பாடசாலை விடுமுறை காரணமாகவும் எதிர்வரும் வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் சிவனடிபாத மலை பருவகாலம் நிறைவுக்கு வரவுள்ளது என்பதால் யாத்திரிகர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தற்போது சுமார் இரண்டு ஆயிரம் வாகனங்கள் வந்துள்ள நிலையில் நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தயாரிப்பிடங்கள் நிரம்பி வழிவதுடன் நல்லதண்ணி மரே வீதியிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் ரக்காடு கிராமம் வரை வீதி ஓரங்களில் தனியார் பேருந்து மற்றும் கார், வேன், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
தொடர்ந்து நோட்டன் வழியாக மற்றும் ஹட்டன் வழியாக வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன என்றும் ஆதலால் வீதி போக்குவரத்து பொலிஸார் மற்றும் பொலிசார் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார்.